வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை

Report Print Tamilini in காலநிலை
770Shares

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடிய சாத்தியம் காணப்படுவதுடன் 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பகுதிகளில் அதிக காற்று வீசக்கூடிய நிலை காணப்படுவதனால் மீனவர்களும், கடற்படை சமூகமும் அது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வவுனியாவிலும் திருகோணமலையிலும் தொடர் வறட்சியை தொடர்ந்து இன்று அடைமழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது.