பதுளை பிரதேசத்தில் ஆலங்கட்டி மழை

Report Print Vethu Vethu in காலநிலை

பதுளையை அண்மித்த பிரதேசம் ஒன்றில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மீகஹகிவுல, பிட்டமாருவ பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்துள்ளது.

சுமார் அரை மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சில பிரதேசங்களில் தேசிக்காய் அளவில் பாரிய ஆலங்கட்டிகள் விழுந்துள்ளன.

இந்த மழை காரணமாக இறப்பர் மரங்கள் முறிந்து விழுந்து, பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மீகஹகிவுல மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் பல மாதங்களின் பின்னர் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.