தொடரும் பலத்த காற்றுடன் கூடிய மழை!

Report Print Malar in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதாவது, வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மாகாணங்களில் அடுத்த சில மணித்தியாலங்கள் மழை பொழியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.