மட்டக்களப்பில் கடும் மழையுடன் கூடிய காலநிலை!

Report Print Kumar in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாலை தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது.

கடுமையான வெயிலுடன் கூடிய காலநிலை கடந்த சில வாரங்களாக நிலவிவந்த நிலையில் இன்று மாலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைபெய்துவருகின்றது.

நாடளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக கடுமையான மழைபெய்துவந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெயிலுடன் காலநிலை நிலவிவந்தது.

இந்த நிலையில் இன்று மாலை தொடக்கம் காற்றுடன் மழைபெய்துவருகின்றது.இது சில தினங்களுக்கு நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.