காரைதீவில் நேற்று மினிசூறாவளி

Report Print V.T.Sahadevarajah in காலநிலை

காரைதீவில் நேற்று பிற்பகல் மினிசூறாவளி வீசியுள்ளதுடன் பலத்த மழையும் பொழிந்துள்ளது.

இதனால் பெரும்பாலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காரைதீவு பிரதேசசபை அலுவலகத்தின் மேல் மாடியிலிருந்த கண்ணாடித்தொகுதி ஒன்று உடைந்து நொறுங்கி கீழே வீழ்ந்துள்ளது.

அதேபோல் பிரதேச சபையின் விபுலாநந்த கலாசார மண்டபத்தின் வரவேற்பு அறிவித்தல் பதாதை காற்றில் சுழற்றி வீசப்பட்டு அருகிலுள்ள உயர்வலுவுள்ள மின்கம்பத்தில் வீழ்ந்துள்ளது.

இதனால் அப்பகுதியெங்கும் சில மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன், பொருட்கள் உட்பட பெட்டிக்கடைகள் சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்டிருந்தன.