நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழை! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Malar in காலநிலை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும், பலத்த காற்றினாலும் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Latest Offers