நீரில் மூழ்கும் அபாயத்தில் காலி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in காலநிலை

நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக காலி மாவட்டத்தில் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியிருப்பதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபதிரன எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் மழை பெய்தால் வெள்ள அபாயம் காணப்படுவதாகவும் எவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திற்கும் முகம் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நீரில் மூழ்கியிருக்கும் பிரதேச மக்களின் பாதுகாப்பிற்காக இலங்கை கடற்படையினரும் இராணுவத்தினரும் அப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காலி பத்தேகம பிரதான வீதியின் தாழ் நிலப்பகுதிகளும் மழை நீரினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை மாட்டவத்திலும் சில பகுதிகள் நீரில் மூழ்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நில்வள கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மாத்தறை, கடவத்சதர, திககொட, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, அத்துரலிய, பிடபெத்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.