கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அக்குறணை நகரில் பெய்த அடை மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கண்டி - மாத்தளை ஏ9 வீதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியமையினால் போக்குவரத்து சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
அக்குறணை நகரம் ஊடாக வழிந்தோடிய வெள்ள நீர் காரணமாக அக்குறணை நகரம் நீரில் மூழ்கியுள்ளது. நேற்று இரவு வரை நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீர் மட்டம் காரணமாக அக்குறணை நகரத்தில் உள்ள 300க்கும் அதிகமான வர்த்தக நிலையங்களுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்.