வவுனியாவில் நிலவிய கடும் வறட்சியுடனான காலநிலைக்கு பின்னர் இன்று பிற்பகல் மழை பொழியத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், பலத்த காற்று, இடியுடன் கூடிய மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது.
வவுனியா - மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
வடிகால்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய நிலையில் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும், பொதுமக்களும் நன்மையடைந்துள்ளனர்.