நாடளாவிய ரீதியில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யும்!

Report Print Murali Murali in காலநிலை

நாடளாவிய ரீதியில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு, வடமத்திய, வடக்கு மற்றும் மாத்தறை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கே இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சில இடங்களில் 70-80 வரையிலான வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். சப்ரமுகவ, வடமேற்கு, மன்னார் மற்றும் வவுனியாவில் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையிலான மழை பெய்யும்.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம், தென்பகுதிகளில் நாளை காலை இலேசான மழை பெய்யும்.

சப்ரகமுவ,மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் நாளை காலை மேகமூட்டம் மிக்க வானிலை காணப்படும்.

Latest Offers

loading...