பதுளையில் ஏற்பட்ட விபரீதம் - தாயும் பிள்ளைகளும் உயிரிழப்பு

Report Print Murali Murali in காலநிலை

பதுளை வெலிமடையில் தற்காலிக குடியிருப்பு மீது மரம் வீழ்ந்ததால் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10, 14 மற்றும் 18 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய ஆணொருவர் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக சுறேஜனி, பிரசாந்த குமரன், ராதா கிருஷ்ணா என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு பெய்த அடைமழையின் காரணமாக வீட்டுக்கு அருகில் இருந்த மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.