காற்று மாசு அளவு அதிகரிப்பு - கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in காலநிலை

கொழும்பு நகரில் நாளையதினம் காற்று மாசின் அளவு அதிகரிக்க கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக மாசு அளவு மட்டம் சாதாரண நிலையில் காணப்பட்டது. எனினும் கடந்த 5ஆம் 6ஆம் திகதிகளில் காற்று மாசின் அளவு அதிகரித்து காணப்பட்டதாக நிலையத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் ஹேமசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் நாளையதினம் காற்று மாசு அதிகரிக்கவுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதுடெல்லியின் காற்று மாசின் அளவு மட்டம் மோசமான நிலையில் காணப்படுகிறது. அங்கிருந்து காற்றின் வழியாக கொழும்பிற்கும் மாசு பரவியுள்ளமை குறிப்பிடத்தக்து.