தொடர் மழை காரணமாக மட்டக்களப்பில் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

Report Print Rusath in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தாழ் நிலங்கள் பல வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன், படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம் மற்றும் பழுகாமம் போன்ற இடங்களிலுள்ள குளங்கள் நிரம்பியுள்ளன.

அத்துடன் உறுகாமம், உன்னிச்சை, நவகிரி மற்றும் கடுக்காமுனைக்குளம் உள்ளிட்ட பெரிய குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டில் வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் இன்றிலிருந்து நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.