திருகோணமலை மாவட்டத்தில் அடை மழை!

Report Print Mubarak in காலநிலை

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் மற்றும் சில வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

அந்தவகையில், கந்தளாய், கிண்ணியா, மூதூர், தோப்பூர், புல்மோட்டை மற்றும் வெருகல் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகின்றது.

இதனால் சிறு வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு, கால்வாய்களில் வெள்ள நீர் வழிந்தோடி வருகின்றது.

தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் திருகோணமலை மாவட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வீதமும் குறைந்துள்ளதாகவும் பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் கடும் அடை மழை பெய்து வருவதனால் வயல் வேலைகளும் கைவிடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.