வெள்ளநீர் காரணமாக போக்குவரத்தில் சிரமத்தை எதிர்கொள்ளும் மட்டக்களப்பு மக்கள்

Report Print Varunan in காலநிலை

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வாரமாக கனமழை பெய்துவருவதால் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதி உள்ளிட்ட பல வீதிகளை வெள்ள நீர் ஊடறுத்து பாய்வதால் போக்குவரது செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - படுவான்கரை பிரதேசத்தில் வயல்கள் மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக சிறு குளங்கள் நிரம்பியுள்ளமையினால் அந்த குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் வீதியை ஊடறுத்து பாயும் வெள்ள நீர் அதிகரித்து செல்கின்றது.

இத காரணமாக அவ் வீதியில் பயணிக்கும் போது மோட்டார் வாகனங்களினுள் நீர் உட்புகுந்து வாகனங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பல வீதிகளில் நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பலவகையிலும் போக்குவரத்தில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.