தொடர்மழையால் மன்னாரில் பயிர்ச்செய்கை, கால்நடைகள் பாதிப்பு

Report Print Ashik in காலநிலை

மன்னார் மாவட்டத்தில் தொடச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் நிரம்பி வான் பாய்ந்து வருகின்றது.

நாட்டின் பல பாகங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கன்மலை பெய்துவருகின்றது. மன்னர் மாவட்டத்திலும் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக வட மாகாணத்தின் இரண்டாவது பெரிய குளமான கட்டுக்கரைக்குளம் நிரம்பி வான் பாய்வதால் அப் பகுதியைச் சேர்ந்த பல சிறிய மற்றும் நடுத்தர குளங்களும் நிறைந்து வான் பாய்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான கால போக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாகவும் இது வரை மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சீரற்ற காலநிலையால் சுமார் 200 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கால்நடை வளர்ப்பாளர்களும் கால் நடைகளை மேய்ச்சல் நிலங்களில் வைத்து பராமரிப்பதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.