நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா, மத்திய மாகாணங்களில் நாளை மாலை முதல் கடும் மழை பெய்யும் என்று எதிர்வுக்கூரப்பட்டுள்ளது.
வானிலை அவதான மையம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் டிசம்பர் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவும். இதன்போது 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும்.
இதன்காரணமாக மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மலைப்பாங்கான இடங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.