வவுனியா வடக்கில் மூன்று கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிப்பு

Report Print Thileepan Thileepan in காலநிலை

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 3 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் பாதிப்படைந்துள்ளன.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்த வகையில், வவுனியா வடக்கு புளியங்குளம் வான் பாய்வதால் பழையவாடி கிராமத்திற்கான போக்குவரத்து பாதையும், வெள்ள நீர் வீதியை ஊடறுத்து பாய்வதால் வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை, சின்னபூவரசன்குளம் கிராமத்திற்கான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளன.

மேலும் பல குளங்கள் உடைப்பெடுக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.