திருகோணமலையில் கடும் மழை! கிண்ணியா, நான்காம் வாய்க்கால் பிரதான போக்குவரத்து துண்டிப்பு

Report Print Mubarak in காலநிலை

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழையினால் கிண்ணியா மற்றும் நான்காம் வாய்க்கால் பிரதான வீதியினூடாக வெள்ள நீர் வழிந்தோடுவதால் போக்குவரத்துகள் மேற்கொள்ள முடியாதுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் கன மழையினால் எட்டாம் வாய்க்கால் சீனவெளிக் குளத்தின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது.

கிண்ணியா, வான்எல போன்ற பகுதிகளின் வயல் நிலங்களும் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது.தொடர் மழையினால் வயல் வேலைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

முள்ளிப்பொத்தான பிரதான வீதியிலும் வெள்ள நீர் வழிந்தோடுவதோடு,போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.