மீண்டும் அம்பாறையில் அடைமழை : நோய் பரவும் அபாயம்

Report Print V.T.Sahadevarajah in காலநிலை

அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் அப்பகுதியில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறையில் கடந்த மூன்று தினங்களாக குறைந்திருந்த மழை மீண்டும் இன்று காலை முதல் பெய்து வருவதுடன் தொடர்ச்சியான மழை காரணமாக ஒரு வகையிலான நோய் பரவி வருவதாக அப்பகுதியிலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவிக்கையில்,

காலநிலை பாதிப்பால் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவிவருவதால் மக்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குறித்த காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துவருகின்றது, என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மீண்டும் ஆரம்பித்திருக்கும் கனமழை காரணமாக தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளிலும் வெள்ளம் தேங்கிநிற்கிறது. இதன் காரணமாக க.பொ.சா.த. பரீட்சாத்திகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்டுகிறது.

Latest Offers