மட்டக்களப்பில் மீண்டும் மழையுடனான காலநிலை! மக்கள் அசௌகரியத்தில்

Report Print Kumar in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் நேற்று மாலை முதல் பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 1500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தன.

பல இடங்களுக்குமான போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் படகுகள் மூலம் போக்குவரத்துக்கள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மழை ஓய்ந்து சீரான காலநிலை நிலவியதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதுடன் இடம்பெயர்ந்த மக்களும் தமது இருப்பிடம் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்துள்ளதனால் மீண்டும் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இருப்பிடங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...