24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவு

Report Print Rusath in காலநிலை

மட்டக்களப்பில் இன்றைய தினம் வரையில் மழையுடனான காலநிலை தொடர்ந்து வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரையில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு நகரில் 43.1 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரி பகுதியில் 8.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 32 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளிப் பகுதியில் 26.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பாசிக்குடாப் பகுதியில் 51.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 30 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 4.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 29.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 23.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கிரான் பகுதியில் 80.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மாவட்டத்திலுள்ள அனைத்து சிறிய குளங்களும் மழை நீரில் நிரம்பி வழிவதுடன், பெரிய குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...