திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 5353 பேர் பாதிப்பு

Report Print Abdulsalam Yaseem in காலநிலை

திருகோணமலை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 5353 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே. சுகுனதாஸ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் ,

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 5353 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிண்ணியா மற்றும் மனையாவெளி பகுதிகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 18 குளங்களில் 11 குளங்கள் நிரம்பி வழிகின்றன. கந்தளாய் குளத்தில் 85600 ஏக்கர் அடி நீர் வந்துள்ளது. மேலும் வான் எல, பேரமடுவ, ஜனரஞ்சன குளம், மஹதிவுல்வெவ குளங்கள் நிரம்பி வழிவதாகவும் மொரவெவ - பம்மதவாச்சி குளத்தின் குளக்கட்டு உடைப்பெடுத்த நிலையில் அதனை புனரமைக்கும் பணியில் இராணுவத்தினரும் அனர்த்த முகாமைத்துவம் ஈடுபட்டுள்ளனர்,என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...