திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் மழையுடனான காலநிலை

Report Print Mubarak in காலநிலை

இலங்கையின் தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மழையுடனான காலநிலை தணிந்திருந்த போதிலும் நேற்றைய தினம் தொடக்கம் மீண்டும் தொடர்கின்றது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் சுமார் 5350 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

கடந்த ஒரு வார காலமாக திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வந்த மழை வீழ்ச்சியின் அளவு அதிகரித்து காணப்பட்ட போதிலும் தற்போது மழை வீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Latest Offers

loading...