ஐந்து நாட்களுக்கு பின்னர் அம்பாறையில் மீண்டும் கனமழை

Report Print V.T.Sahadevarajah in காலநிலை

கடந்த ஐந்து தினங்களின் பின் அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் இடி முழக்கத்துடன் கனமழை பொழிய ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஏற்கனவே இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வந்திருந்தது.

இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன், பெரும்பாலான மக்கள் தம்முடைய குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக ஓய்ந்திருந்த மழையுடனான காலநிலையானது மறுபடியும் ஆரம்பித்துள்ளது.

Latest Offers

loading...