மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு! கிண்ணியா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

Report Print Abdulsalam Yaseem in காலநிலை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதனால் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சோலை வெட்டுவான், மயிலப்பன் சேனை, பூவரசன் தீவு, மஜீத் நகர், தீனேறி, கண்டல்காடு போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த பகுதியிலுள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறும், அந்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் அவ்வப்போது விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பிரதேச செயலாளர் முகம்மது கனி அறிவித்துள்ளார்.

மேலும், கிண்ணியா பிரதேசத்தில் சில இடங்களில் தரை மார்க்க பாதைகள் நீரினால் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Latest Offers