மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

Report Print Kumar in காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் மற்றும் செங்கலடி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு , கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி,கிரான் ரெஜி மண்டபம், கிண்ணையடி, குமாரவேலியார் கிராமம் ஆகிய பகுதிகளில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு இராசமாணிக்கம் பொதுமக்கள் அமைப்பினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இராசமாணிக்கம்,தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் ம்றறும் வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று இந்த உதவிகளை வழங்கி வைத்துள்ளனர்

இதன்போது அத்தியவாசியப் பொருட்கள் உட்பட பல்வேறு உதவிப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ச்சியாக குறித்த பகுதிகளில் வெள்ளநிலை நிலவி வருவதன் காரணமாக மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்க வைக்கப்படும் நிலையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.