நாட்டில் இன்று இயல்பான வானிலை தொடரும் என அறிவிப்பு

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டில் இன்று இயல்பான வானிலை தொடரும் என வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

எனினும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை வீழ்ச்சிக்கான சாத்தியங்கள் உண்டு என தெரியவருகிறது.

இதனை தவிர ஏனைய இடங்களில் பொதுவான வானிலை நிலவும். காலை வேளைகளில் சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பகுதியில் இன்றும் சுமாரான வானிலையே தொடரும். காற்று 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

மன்னாரில் இருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கடல் சிறிய கொந்தளிப்பாக இருக்கும்.

Latest Offers

loading...