நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும்

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி மாத்தறை மாவட்டங்களிலும் சப்ரகமுவ மாகாணத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

காலைப்பொழுதில் மேல் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானிலை சீராகவே இருக்கும்.

மழை பெய்யும் நேரங்களில் ஏற்படும் இடிமின்னல் தாக்கங்களில் இருந்து தம்மை காத்துக்கொள்ள பொதுமக்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வானிலை மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை கடல் பிரதேசத்தில் கொழும்பு முதல் மாத்தறை காலி கடற்பரப்பில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காற்று 20-30 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.