நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டில் இன்று நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் கண்டியிலும் மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை சப்ரகமுவ மாகாணம், களுத்துறை, காலி மற்றும் மாத்தறையில் பெய்யும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென்மாகாணங்களில் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

முல்லைத்தீவில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கடல் பகுதியிலும் மழை பெய்யும்.

மாலைவேளையில் கொழும்பில் இருந்து மாத்தறை ஊடாக காலி கடற்பகுதியில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.