இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், வட மேல் மாகாணம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் வாழும் மக்கள் அதிக அவதானத்தை செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறுவர்கள், வயோதிபர் மற்றும் நோயாளிகள் அவதானமாக இருக்குமாறு திணைக்களத்தின் எச்சரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக உடலில் உள்ள நீர்த் தன்மை குறைவடைவதானால் அதிக சோர்வு நிலை ஏற்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் போதுமான அளவு நீர் அருந்துமாறும், வெளியே அதிக நேரம் செயற்பட கூடாதெவும், வெள்ளை நிறங்களிலான ஆடைகளை பயன்படுத்துமாறு திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.