இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in காலநிலை

வரட்சியான காலநிலை நிலவுகின்ற நிலையில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மக்களுக்கு சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விசேடமாக மேல், வட மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் அதிக அவதானத்தை செலுத்த வேண்டும் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உடலில் நீர் தன்னை குறையவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அதிக வெப்பமான காலநிலையின் போது அதிக அளவு நீர் பருக வேண்டும் என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.