இலங்கை மக்களை இன்றும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Report Print Ajith Ajith in காலநிலை

இலங்கையின் சில இடங்களில் இன்றும் கடும் வெப்பநிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி வடமேற்கு, மேல் மாகாணங்களிலும், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்து இருக்கும்.

இரத்தினபுரி மாவடத்திலும் அதிகரித்த வெப்பநிலை நிலவும்.

எனவே இந்த நேரங்களில் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு உத்திகளை கையாளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

முடியுமான நேரங்களில் நிழல்களை நாடல், முதியோர்களின் நோய் நிலையை பரிசோதித்தல் மற்றும் வெள்ளைநிற அல்லது பாரமற்ற ஆடைகளை அணிதல் போன்ற உத்திகளை கையாளுமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் தொடர்ச்சியாக கடும் வெப்பநிலை பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.