நாட்டு மக்களுக்கு வானிலை அவதான மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையின்போது 11 மாவட்டங்களின் மக்கள் பாதுகாப்பான முறைகளை கையாளுமாறு வானிலை அவதான மையம் கோரியுள்ளது.

வடமேற்கு, மேல்,தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்ட மக்களுக்கும் குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் நோயாளர்கள் இவ் விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமெனவும் அதிகளவிலான நீர் அருந்த வேண்டுமெனவும் குழந்தைகளை சரிவர கவனிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மன்னார், புத்தளம், குருநாகல், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் கடும்வெப்பம் நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

குறித்த பிராந்தியங்களில் வசிப்பவர்கள் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக காலை வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதுபோனால் பக்கவாதம், தசைப்பிடிப்புகள் மற்றும் வெப்பச் சோர்வு போன்ற அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.