வெப்பநிலை நீடிக்கும்! வானிலை அவதான மையம் எச்சரிக்கை

Report Print Ajith Ajith in காலநிலை

நடப்பு வெப்ப வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது.

தற்போதைக்கு வங்காள விரிகுடாவில் இருந்து மழை பெய்வதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை என்று வானிலை அவதான மையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே மழைக்கான வாய்ப்பு இன்னும் ஒரு மாதத்துக்கு பின்னரே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிலவேளைகளில் லேசான மழைவீழ்ச்சி ஏற்பட்டாலும் அது நடப்பு வெப்பத்தை தணிக்கும் வகையில் அமையாது.

இதேவேளை நேற்று குருநாகலில் 37.3 சென்றிகிரேட் வெப்பம் பதிவானதாக அத்துல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

ஏனைய வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தென்மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலையிலும் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று அவர் எதிர்வுகூறினார்.

நாட்டில் நாளை கடும் வெப்பநிலை நிலவும்!

நாட்டில் நாளை வரை கடும் வெப்பநிலை தொடரும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தென் மாகாணம் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இந்த கடும் வெப்பநிலை நிலவும் இந்த பிரதேசங்களில் வெப்பநிலை அதியுச்ச நிலைக்கு செல்லலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே கடந்த பல நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் இந்த கடும் வெப்பநிலை நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளுமாறு கோரப்பட்டு வருகின்றனர்.