காலநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Report Print Ajith Ajith in காலநிலை
194Shares

இலங்கையில் நாளையத்தினம் அதியுயர் கடும் வெப்பம் நிலவுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் மேல்,சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை,குருநாகல்,மொனராகலை போன்ற மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தகுந்த முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

எனினும் இரத்தினபுரி,காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களில் நாளைய தினம் மாலை வேளையில் மழை பெய்ய கூடுமெனவும்,ஏனைய பகுதிகளில் கடும் வெப்ப சூழ்நிலை நிலவுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.