நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Report Print Ajith Ajith in காலநிலை

நாட்டில் நிலவும் வானிலையில் ஓரளவு மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாளை முதல் 18ஆம் திகதிவரை இந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேல் சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களில் இன்று வானிலை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கிழக்கு கரைப்பகுதிகளில் இன்று இரவில் மழை பெய்யலாம். ஏனைய பகுதிகளில் வழமையான வானிலையே நிலவும். இதேவேளை வடகிழக்கு கடலில் 20-30 கிலோமீற்றர் அளவில் காற்று வீசக்கூடும்.