வெப்பநிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Ajith Ajith in காலநிலை

இலங்கையின் வெப்பநிலை அடுத்து வரும் நாட்களில் மிகத்தீவிர நிலையை அடையக்கூடும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு, சப்ரகமுவ, மன்னார், மொனராகலை, அநுரதபுரம், கம்பஹா, வவுனியா போன்ற இடங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் வெப்பம் 32 செல்சியஸ் முதல் 41 செல்சியஸ் வரையில் நிலவக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் தசைப்பிடிப்பு உட்பட்ட உபாதைகளுக்கு உள்ளாகக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.