கிளிநொச்சியில் மரமுறிந்து விழுந்து பொலிஸ் அதிகாரி காயம்

Report Print Yathu in காலநிலை

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விடுதி மீது பாரிய பாரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரண்டு பொலிஸார் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக வீசிவரும் கடும் காற்றினால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

நேற்று மாலை வீசிய பலத்த காற்றினால் இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திலுள்ள மாமரம் ஒன்று பொலிஸார் தங்கும் விடுதி மீது முறிந்து விழுந்துள்ளது.

இதன்போது பொலிஸ் விடுதியில் தங்கியிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் பணிபுரியும் பிரஜீவன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.