இன்றைய வானிலை! இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் சாத்தியம்

Report Print Steephen Steephen in காலநிலை

மேல், சப்ரகமுவை, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் குறிப்பாக மத்திய மலை நாட்டின் மேற்கு மலைகளை அண்மித்த பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைப் பெய்யும் எனவும் வடக்கு, கிழக்கு ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சிறியளவில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை நாளைய தினம் பிற்பகல் மூன்று மணி வரை செல்லுப்படியாகும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.