நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

Report Print Ajith Ajith in காலநிலை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்

வடக்கு,வடமத்திய, மற்றும்,வடமேல்,மாகாணங்களிலும்,ஹம்பாந்தோட்டை,மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.