இலங்கையின் பல பாகங்களில் இன்று மழையுடனான காலநிலை

Report Print Ajith Ajith in காலநிலை

இலங்கையின் வானிலையில் இன்று மேல் சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களி;லும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 40 கிலோ மீற்றர் வரையான காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை கடற்பிரதேசத்திலும் பல இடங்களில் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது

காலி முதல் பொத்துவில் வரையான ஹம்பாந்தோட்டை வரையான கடலிலும் நீர்கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான கடலிலும் காற்று 30முதல் 40 வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.