நாட்டின் வானிலையில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா, கிழக்கு,வடக்கு, வடமத்திய, வடமேல், மற்றும் மத்திய மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.
ஊவா, கிழக்கு மற்றும் வடமாகாணங்களில் 50 மில்லி மீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.
இதேவேளை வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்று மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்று வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது