நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

Report Print Ajith Ajith in காலநிலை
70Shares

நாட்டில் இன்று பிற்பகலில் ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 50மில்லிமீற்றர் வரை மழைபெய்யும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.