நாட்டில் சீரற்ற காலநிலை! பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in காலநிலை
149Shares

இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இமதுவ மற்றும் பின்னடுவவுக்கு இடையே கொழும்பு செல்லும் பாதையை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிருலப்பனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று காலை பேஸ்லைன் வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.