தென்னிலங்கையில் கடல்நீர் தரைக்கு வரும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in காலநிலை

தென்னிலங்கையின் கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாக உள்மையினால் கடல்நீர் தரைக்கு வரும் ஆபத்து உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பேருவளையில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பிரதேசங்களில் கடலுக்கு அருகில் வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவ கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும்.

மேல் மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும் மாலை அல்லது இரவில் மழை பெய்ய கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கிலும் பொலநறுவை, மன்னார், மாத்தளை, மாவட்டத்திலும் மத்திய மாகாணத்திலும் மணிக்கும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.