தென்னிலங்கையில் சில பகுதிகள் கடல் நீரில் மூழ்கும் வாய்ப்பு! மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Ajith Ajith in காலநிலை
433Shares

இலங்கையின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடல் அலைகளின் தாக்கம் நாளை அதிகமாக இருக்கும் என்று வானிலை அவதான மையம் எதிர்வுகூறியுள்ளது.

தென் மாகாணம், பொலன்னறுவை, மன்னார், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும் காற்றின் வேகம் 60 கி.மீ வேகத்தில் அதிகரிக்கும்.

இதன்போது தென்பகுதி பேருவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான காலி வீதி வழியான கடலோர பகுதி நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தநிலையில் இலங்கையின் வானிலையில் இன்று சப்ரகமுவ, மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும்.

வடமேற்கு மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றர் வரையில் மழை பெய்யலாம் என்று வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது.