இலங்கையின் கடற்பகுதிகள் தொடர்பில் வானிலை அவதான மையம் சிவப்பு எச்சரிக்கை

Report Print Ajith Ajith in காலநிலை

இலங்கையின் காங்கேசன்துறை, ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னார்,கொழும்பு, காலி கடற்பகுதிகள் தொடர்பில் வானிலை அவதான மையம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்றிரவில் இருந்து அடுத்த சில நாட்களில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு நிலை ஓரளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்ரகமுவ, மேற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில நேரங்களில் மழை பெய்யும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 50 கி.மீற்றர் வேகத்தில் அதிகரிக்கக்கூடும்.

வேக அலைகளின் தாக்கத்தால் தென்னிலங்கையின் பேருவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான காலி வீதிக்கு கடல் நீர் வரக்கூடும்.

எனவே இது குறித்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வானிலை அவதான மையம் கோரியுள்ளது.