நாடு முழுவதும் சீரற்ற காலநிலை - பல பகுதிகளில் மின்சார தடை - வாக்கு எண்ணும் பணிகளுக்கு சிக்கல்?

Report Print Vethu Vethu in காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அடை மழை மற்றும் கடும் காற்றுடனான காலநிலை நிலவி வருகின்றது.

இதன் காரணமாக இரத்தினபுரி, கரிஎல்ல, மத்துகம, பாதுக்க, ஹோமாகம, அவிசாவளை, பயாலகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில்ல மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

எனினும் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இன்றையதினம் நாடளாவிய ரீதியிலுள்ள 71 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.