கடற்றொழில் திணைக்களத்தினால் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்!

Report Print Rakesh in காலநிலை
107Shares

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கடற்றொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக நாளை நண்பகல் 12மணி வரை மீன்பிடி படகுகளில் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்கும் முகமாகவே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் அதிகரித்துக் காணப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.